பக்கம்:நாடகக் கலை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

அகவற்பாவால் எழுதியிருக்கிறார். இது தமிழ்ப் புலவர்களாலும் அறிஞர்களாலும் போற்றப்பெற்ற ஒரு சிறந்த தமிழ் நாடகம். இந்நாடகத்தை இதுவரை நானறிந்த வரையில் யாரும் நடித்ததில்லை. 'இது நடிப்பதற்காக எழுதப்பட்டதன்று' என ஆசிரியரே குறிப்பிட்டிருக்கிறார். இப் பெரியாரைப் பின்பற்றிப் பல ஆசிரியர்கள் அகவற்பா நடையில் நாடகங்களை எழுதியிருக்கிறார்கள்.

'நாடக இயல்' என்னும் இலக்கண நூலை எழு திய பரிதிமாற் கலைஞன் அவர்கள் ரூபாவதி, கலாவதி என்னும் இரு நாடகங்களை உரைநடையிலும், மானவிஜயம் என்னும் நாடகத்தை அகவற்பா நடையிலும் எழுதியிருக்கிறார்.

பண்டைக்கால நாடகப் பாடல்கள், வெண்பா, கலித்துறை, விருத்தம், தோடையம், திபதைகள், தருக்கள், கொச்சகம், தாழிசை, அகவல், கண்ணிகள், சிந்துகள் முதலிய பல விதமான பாவினங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

புதிய பாதை கண்டோர்

இவ்வாறு ஆடப்பட்டு வந்த நாடகத்தை ஒழுங்கு படுத்தி இன்று நாம் காணும்படியான நாடக மேடை அமைப்புக்குக் கொண்டு வந்தவர் தஞ்சை நவாப் கோவிந்தசாமி ராவ் எனப் பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் தமது 'நாடகத் தமிழ்' என்னும் நூலிலே குறிப்பிட்டுள்ளார்.

நானறிந்த வரையில் இதே காலத்தில் கும்பகோணம் திரு. நடேச தீட்சிதர் அவர்களால் துவக்கப்பட்ட திரு. கல்யாணராமய்யர் நாடகக் குழுவினரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/37&oldid=1540546" இலிருந்து மீள்விக்கப்பட்டது