பக்கம்:நாடகக் கலை 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நாடகத் துறையில் புதிய பாதை கண்டவர்கள் எனத் தெரிகிறது.

தமிழ் நாடகக் கலைக்கு மகத்தான பணி புரிந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இந்தக் கல்யாண ராமையர் நாடகக் குழுவில் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட தமிழ் நாட்டு நாடக சபைகள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கர தாஸ் சுவாமிகளின் நாடகங்களையே நடித்து வந்தார் கள் என்று கூறவேண்டும்.

நவாப் கோவிந்தசாமி ராவ், கல்யாணராமையர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் நாடகத் துறையில் புகுந்த காலத்தை யொட்டி நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் 'சுகுண விலாச சபை' என்னும் ஒரு (அமெச்சூர்) பயில்முறை சபையை 1891-ல் சென்னையில் தோற்றுவித்தார்.

சுகுண விலாச சபையின் தோற்றமும், பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் அச் சபைக்காக எழுதிய பல்வேறு வகைப்பட்ட நாடகங்களும் தமிழ்நாட்டில் பல அமெச்சூர் நாடக சபைகளைத் தோற்றுவித்தன. தொழில் முறை நாடக சபைகளும் ஏற்று நடித்து வளர்ச்சி பெறுவதற்கு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் வாய்ப்பளித்தனவென்பதை நன்றியோடு குறிப்பிடவேண்டும்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர்

'ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானுல் அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/38&oldid=1540573" இலிருந்து மீள்விக்கப்பட்டது