பக்கம்:நாடகக் கலை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கேசவன், எம்.கே.ராதா, பக்கிரிசாமி பிள்ளை, எம்.ஜி. தண்டபாணி, டி. ஆர். பி. ராவ் முதலிய நடிகர்கள் பலர் இந்த நாடக சபையிலே பயிற்சி பெற்றவர்கள்.

மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையின் நாடகங்களையும் நான் பார்த்திருக்கிறேன். திருவாளர்கள். கே. சாரங்கபாணி, நவாப் ராஜமாணிக்கம், பி.டி. சம்பந்தம், எம். எஸ். முத்துக்கிருஷ்ணன், டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை, டி.பாலசுப்பிரமணியம், எம். ஆர்.ராதா, ஏ.எம்.மருதப்பா, எஸ்.வி. வெங்கட் ராமன், டி.கே.கோவிந்தன், சிதம்பரம் ஜெயராமன் முதலிய நடிகர்கள் இச்சபையில் தயாரானவர்கள்.

1914ல் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளோடு சுவாமிகள் தொடர்பு கொண்ட போதுதான் எல்லா நாடகங்களுக்கும் உரையாடல்களை முறையாக எழுதினார் என்று சொல்ல வேண்டும்.

சுவாமிகளின் அரிய சாதனை

சுவாமிகள் நல்ல இசைஞானமுள்ளவர். சந்தம் வண்ணம், இவற்றைப் பாடுவதில் திறமை பெற்றவர். தாள விந்நியாசங்களை நன்கு அறிந்தவர். எனவே தாமாகவே இசையமைத்துக் கொள்ளவும் மற்றவர் சொல்லும் மெட்டுக்களை அறிந்துகொள்ளவும் அவரால் முடிந்தது.

கவரசம்-அதாவது காதல், வீரம்,சிரிப்பு, கோபம், வியப்பு, இழிப்பு, சோகம், பயம், சாந்தம் இப்படி ஒன்பது சுவைகள் சொல்லப்படுகின்றன அல்லவா? இந்த நடிப்புச் சுவை குன்றாமல் அந்தந்தக் கட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்கும் அதிசய திறமை சுவாமிகளிடம் இருந்தது. பாட்டின் மெட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/44&oldid=1540579" இலிருந்து மீள்விக்கப்பட்டது