பக்கம்:நாடகக் கலை 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

அதில் அமையும் சொற்களும் பாத்திரத்தின் உணர்ச்சி பாவத்தை வெளிப்படுத்துவனவாகவே யிருக்கும்.

கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, நாலடியார், திருக்குறள், பழமொழிகள் இவையெல்லாம் சுவாமிகளின் பாடல்களிலும் வசனங்களிலும் பரந்து கிடப்பதைக் காணலாம். சங்க நூல்கள் அத்தனையும் அவருக்கு மனப்பாடம்.

சுவாமிகளின் எந்த நாடகத்தை யெடுத்துக் கொண்டாலும் அதிலே தருமநெறி வலியுறுத்தப் பெற்றிருக்கும். சுவாமிகள் உணர்ச்சிக் கடல். மிகச் சிறந்த நடிகராக இருந்து சபையோரை உணர்ச்சி வசப்படுத்தியவர். எனவே, அவருடைய நாடகப் பாடல்களில் உணர்ச்சி முதன்மை பெற்றிருக்கும்.

ஒரே நாள் இரவில் நான்கு மணி நேரம் நடை பெறக்கூடிய ஒரு நாடகம் முழுவதையும் அடித்தல், திருத்தல் இல்லாமல் பாடல்கள், வசனங்களோடு எழுதி முடித்த மகத்தான தெய்வீக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்.

சுவாமிகள் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு 'அடிப்படைச் செல்வங்கள்' என்று சொல்லலாம். இந்த நாடகங்களே சென்ற முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் நாடக மேடைக் கலையை அழிந்து போகாமல் காப்பாற்றி வந்துள்ளன.

நாடக உலகின் இமயம்

காலஞ்சென்ற கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சென்னையில் நடைபெற்ற சுவாமிகளின் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/45&oldid=1540580" இலிருந்து மீள்விக்கப்பட்டது