பக்கம்:நாடகக் கலை 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏகை சிவசண்முகம் பிள்ளை கண்டி ராஜா என்னும் மற்றொரு வரலாற்று நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இதுவும் எல்லா நாடக சபையாராலும் பல முறை மேடையில் நடிக்கப்பட்டது.

இன்னும் சித்திரகவி சுப்பராய முதலியார், உடுமலை சந்தச்சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத் தியரர், மதுரபாஸ்கரதாஸ் மற்றும் உடுமலைக் கவிராயரின் மாணாக்கர்களான சந்தானகிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் முதலிய பல நாடகப் புலவர்கள் நாடகக் கலைக்குச் சிறந்த பணி புரிந்திருக்கிறார்கள்.

அக்கால நாடக சபைகள்

பழமையான நாடக சபைகளில் பலவற்றை கல்யாண ராமையர், ராமுடு ஐயர், ராவண கோவிந்த சாமி நாயுடு, வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேஸ்வரய்யர், கே. எஸ். அனந்தநாராயண ஐயர், பி.எஸ். வேலுநாயர், மனமோகன அரங்கசாமி நாயுடு ஜி.எஸ்.முனுசாமி நாயுடு,சாமி நாயுடு, தி. நாராயண சாமி பிள்ளை, சீனிவாச பிள்ளை, மதார் சாய்பு, பரமக் குடி அரங்கசாமி ஐயங்கார் முதலிய பெரியார்கள் பலர் சொந்தமாக நடத்தி, நாடகக் கலையை வளர்த்திருக்கிறார்கள். இவற்றைத் தவிர, பெண்கள் தலைமை தாங்கிச் சில நாடக சபைகளை நடத்தியிருக்கிறார்கள். பாலாமணி, பாலாம்பாள், ராஜாம்பாள், சாரதாம்பாள், அரங்கநாயகி, வி.பி. ஜானகி முதலியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இப்போது நான் குறிப்பிட்டவர்களின் நாடக சபைகளுக்கெல்லாம் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகளே ஆசிரியர் என்பதும், அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/47&oldid=1540582" இலிருந்து மீள்விக்கப்பட்டது