பக்கம்:நாடகக் கலை 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

பம்மல் சம்பந்தனாரின் மனோகரா நாடகத்தைத் தொழில் முறை நாடக சபையினர் அனைவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் இரண்டு நண்பர்கள், இரத்தினாவளி, காலவரிஷி, வேதாள உலகம், லீலாவதி சுலோசனா, சபாபதி, கள்வர் தலைவன் முதலிய நாடகங்களும் பல சபையினரால் நடிக்கப் பெற்றுள்ளன.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் தமது நாடக அனுபவங்களை யெல்லாம் 'நாடக மேடை நினைவுகள்' என்ற தலைப்பில் எழுதி ஆறு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். 'நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி?' என்ற தலைப்பிலும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இவை நாடகம் பயில்வோருக்குப் பெரிதும் பயன்தரக் கூடியவை.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் நாடகத் தைத் தொழிலாகக் கொள்ளாது கலை வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு தமிழ் நாடகக் கலைக்கு ஓர் உயர்வான நிலையைத் தேடித் தந்துள்ளார்.

இவரது சுகுண விலாச சபையில் காலஞ்சென்ற திருவாளர்கள் ஆர். கே. சண்முகம் செட்டியார், எஸ். சத்திய மூர்த்தி, வி.சி.கோபாலரத்தினம், சி.பி. இராமசாமி ஐயர் முதலிய பெரியோர்களெல்லாம் நடிகர்களாக மேடையில் தோன்றியிருக்கிறார்கள் என்ற சிறப்பையும் குறிப்பிட விரும்புகிறேன். பம்மல் சம்பந்தனார் நாடகப் பேராசிரியராக விளங்கியதோடு மட்டுமில்லாமல், தாம் படைத்த நாடகப் பாத்திரங்களைத் தாமே ஏற்றுச் சிறப்பாக நடித்தும் புகழ் பெற்றார். இவர் மனோகரன், அமலாதித்யன் முதலான வேடங்களில் நடித்துள்ள சிறப்பினைப் பாராட்டாதார் இலர். மத்திய சங்கீத நாடக அகடமியின் சார்பில் பாரத ஜனாதிபதி இவருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/49&oldid=1540589" இலிருந்து மீள்விக்கப்பட்டது