பக்கம்:நாடகக் கலை 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குச் சிறந்த நாடக நடிகருக்கான விருதுகளை வழங்கி யுள்ளார்.

தமிழ் நாடக உலகம் 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என சங்கரதாஸ் சுவாமிகளையும் 'தமிழ் நாடகத் தந்தை' என 'பத்ம பூஷணம்' பம்மல் சம்பந்தனாரையும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது.

எங்கள் சபை

1918-ல் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தொடங்கியபோது,நானும் என் சகோதரர்களும் அதில் நடிகர் களாகச் சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் மறை வுக்குப் பின், 1925-ல் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா என்ற பெயரில் சொந்தமாகவே ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினோம்.

அன்று முதல் இயங்கிவரும் எங்கள் குழுவிலும், சிறந்த நடிப்புக் கலைஞர்கள் பலர் தோன்றினார்கள். திருவாளர்கள் என். எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். சாமிநாதன், எஸ்.வி. சகஸ்ரநாமம், கே. ஆர். ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, என். எஸ். பாலகிருஷ்ணன், பிரண்ட் ராமசாமி, டி. என். சிவதாணு, ஏ. பி. நாகராஜன், டி. வி. நாராயணசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், எம்.எஸ். திரௌபதி, எம். என். ராஜம் முதலியோர் எங்கள் குழுவில் வளர்ந்தவர்கள்.

பாலர் நாடக சபைகளில் அந்நாளில் பெண்களைச் சேர்ப்பது வழக்கமில்லை. ஆண்களே பெண் வேடம் புனைந்து வந்தார்கள். பிரபலமாக விளங்கிய எல்லா நாடக சபைகளிலும் இதே வழக்கம்தான் இருந்து வந்தது. இதில் முதல் முதலாக மாறுதல் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/50&oldid=1540590" இலிருந்து மீள்விக்கப்பட்டது