பக்கம்:நாடகக் கலை 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

பெண்களையும் சேர்த்து நடிக்கச் செய்தது எங்கள் நாடக சபைதான் என்பதைப் பெருமையோடு குறிப்பிட வேண்டும். அவ்வாறு முதன் முதலாக எட்டு வயதுப் பருவத்திலேயே எங்கள் குழுவில் நடிகை யாகச் சேர்க்கப்பட்டவர் எம்.எஸ். திரௌபதி.

சதாவதானம் பாவலர்

1922-ல் சென்னையில் சதாவதானம் திரு. தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் அவர்கள் பால மனோகர சபா என்ற பெயரால் ஒரு நாடக சபையை நடத்தினார். நாங்களும் இந்த நாடக சபையில் சில காலம் பணியாற்றினோம். ராஜா பர்த்ருஹரி என்ற சரித்திரக் கற்பனை நாடகத்தையும் கதரின் வெற்றி என்னும் சமூக நாடகத்தையும் இவரே எழுதித் தயாரித்து நடத்தினார். இவர் ஒரு தேசீயவாதி.

கதரின் வெற்றிதான் தமிழ் நாட்டில் முதல் முதலாக நடத்தப்பெற்ற தேசீய சமுதாய நாடகம். இந்நாடகம் 1922-ல் பல எதிர்ப்புகளுக்கு இடையே நடத்தப் பெற்றது.

நாகபுரிக் கொடிப் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தேசீயக் கொடி என்னும் ஒரு நாடகத்தையும் இவர் நடத்தினார்.

லண்டனில் தமிழ் நாடகங்கள்

பாவலர் அவர்களும் சுகுண விலாச சபையில் தடிகராக இருந்து பம்மல் சம்பந்த முதலியார் அவர்களிடம் பயின்றவர்தாம். அந்த நாளிலேயே இவர் ஒரு தமிழ் நாடகக் குழுவை அழைத்துக் கொண்டு, இங்கிலாந்துக்குச் சென்று லண்டன் மாநகரில் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/51&oldid=1540602" இலிருந்து மீள்விக்கப்பட்டது