பக்கம்:நாடகக் கலை 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நாடகங்களை நடத்தி வெற்றி கண்டவர். மகத்தான நெஞ்சுறுதியும், நல்ல புலமையும் படைத்தவர்.

இவருடைய பால மனோகர சபை சில ஆண்டுகளே இயங்கியது. பின்னர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராக இருந்து இவர் மேலும் சில சமுதாய நாடகங்களைத் தயாரித்தார். பதிபக்தி, பம்பாய் மெயில், கதர் பக்தி, கவர்னர்ஸ் கப் ஆகிய இவரது நாடகங்கள் மௌனப் படங்கள் ஏராளமாக வந்த காலத்தில், அவற்றோடு வெற்றிகரமாகப் போட்டியிட்டு நின்றன. இவருடைய பதிபக்தி, பம்பாய் மெயில், கதரின் வெற்றி ஆகிய நாடகங்களை நாங்களும் மற்றும் சில குழுவினரும் நடித்திருக்கிறோம். பாவலர் குழுவிலும் பல நடிகர்கள் தோன்றினார்கள். அவர்களிலே குறிப்பிடத்தக்கவர் திரு.எம்.எம்.சிதம்பரநாதன்.

பாவலர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து இப்போது மதுரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றும் திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்களின் உடன் பிறந்த தமையனார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடக மறுமலர்ச்சித் தந்தை

தொழில்முறை நாடகக் குழுவினருக்கு ஆசிரியராகக் கிடைத்த மற்றொரு மேதை திரு.எம்.கந்தசாமி முதலியார் அவர்கள். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு ஆசிரியராக வந்து இவர் திரு. ஜே. ஆர். ரங்க ராஜு அவர்களின் பிரசித்தி பெற்ற நாவல்களை மேடைக்குக் கொண்டுவந்தார். இராஜாம்பாள், இராஜேந்திரா, சக்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன், மோகன சுந்தரம் ஆகிய நாவல்களை நாடகங்களாக்கியவர் இவர்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/52&oldid=1540599" இலிருந்து மீள்விக்கப்பட்டது