பக்கம்:நாடகக் கலை 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

அவரே ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். இக்கதை திரைப்படமாகவும் வந்துள்ளது.

சமுதாயச் சீர்திருத்தம்

1937-ஆம் ஆண்டில் நாடக மேடையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. நாடகங்களின் போக்கிலும் நோக்கிலும் புதுமைகள் தென்பட்டன. சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டிச் சீர்திருத்தும் வேகம் உடைய "குமாஸ்தாவின் பெண்" என்ற நாடகத்தைத் திரு. டி. கே. முத்துசாமி அவர்கள் எழுதி எங்கள் குழுவில் அரங்கேற்றினார். 'அன்ன பூர்ணிகா மந்திர்' என்ற வங்காளி நாவலைத் தழுவி எழுதப் பெற்ற இந் நாடகம் தமிழ் மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வடுவூர் திரு. துரைசாமி ஐயங்காரின் வித்யா சாகரம் என்ற நாவலும் திரு.முத்துசாமி அவர்களால் நாடகமாக்கப்பட்டு எங்கள் குழுவினரால் நடிக்கப் பெற்றது.

சிவலீலாவின் சிறப்பு

1939-ஆம் ஆண்டில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் அவர்களால் எழுதப்பெற்ற சிவலீலா என்னும் நாடகத்தை நாங்கள் நடித்தோம் இது முற்றிலும் ஒரு புது அமைப்பாகவும் தமிழ் மொழிக்கும் தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் நாடகமாகவும் விளங்கியது. 1941-ல் மதுரையில் ஒரே கொட்டகையில் 108 நாட்கள் தொடர்ந்து சிவலீலா நாடகம் நடை பெற்றது.

108-வது கடைசி நாளன்று மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் எல்லோரும் வருகை புரிந்து எங்கள் நாடக சபையைப் பாராட்டி எங்களுக்கு 'முத்தமிழ்க் கலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/57&oldid=1540610" இலிருந்து மீள்விக்கப்பட்டது