பக்கம்:நாடகக் கலை 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வித்துவ ரத்தினங்கள்' என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினார்கள்.

ஔவை அரங்கேறினார்

1942 பிப்ரவரி-௴ 2 -ஆம் தேதி மதுரையில் புலமைக் கடலான தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகத்தை அரங்கேற்றினோம். இந்த நாடகம் பி.எத்திராஜுலு அவர்களால் எழுதப்பெற்றது. ஒளவையாரில் கதாநாயகன் என்று ஒரு பாத்திரமே இல்லை. நாடகம் முழுதும் ஒரு மூதாட்டியே கதாநாயகி. காதல் சிங்காரக் காட்சிகளும் நாடகத்தில் இல்லை. நாடக இலக்கணத்தின்படி தோன்றுதல், திரிதல், ஒடுங்கல் என்ற முறையை அனுசரித்து எழுதப்படாத ஒரு புதுமை நாடகம் ஒளவையார். இந்த நாடகம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட சிறப்பு எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ் நாடக உலகுக்கே ஒரு மகத்தான வெற்றியென்று குறிப்பிடவேண்டும்.

இந்நாடகத்தில் ஒளவையாராக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை என் வாழ்க்கையிலேயே நான் பெற்ற மிகச் சிறந்த பேறாகக் கருதுகிறேன்.

திரு ஏ.எஸ்.ஏ.சாமி எழுதிய 'பில்ஹணன்' நாடகம் 1944-ல் ஈரோட்டில் எங்கள் நாடக சபையிலே அரங்கேறியது. இது ஒரு சிறந்த இலக்கிய நாடகமாகவும். மக்களின் மதிப்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து திரு.டி.கே. முத்துசாமி அவர்கள் காளமேகப் புலவர் கதையை நாடகமாகத் தயாரித்தார்.

நாடகக்கலை மாநாடுகள்

இந்த சமயத்திலேதான் 1944 பிப்ரவரியில் ஈரோட்டில் தமிழ் மாகாண நாடகக்கலை அபிவிருத்தி மாநாடு பொரு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/58&oldid=1540613" இலிருந்து மீள்விக்கப்பட்டது