பக்கம்:நாடகக் கலை 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கிருஷ்ணன் அவர்கள் வாங்கிப் பொறுப்பேற்று என்.எஸ்.கே.நாடக சபா என்ற பெயரால் நடத்தினார்.

என்.எஸ்.கே .நாடக சபா

என்.எஸ்.கே. நாடக சபையின் பொறுப்பை இடையே சில ஆண்டுகள் திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் ஏற்று திரு. ப. நீலகண்டன் எழுதிய நாம் இருவர் என்னும நாடகத்தையும், தாமே எழுதிய பைத்தியக்காரன் என்னும் சமூகச் சீர்த்திருத்த நாடகத்தையும் நடத்தினார்.

நாடகத்துறையில் அறிஞர் அண்ணா

1944-ல் சந்திரோதயம் என்னும் முழுப் பிரசார நாடகத்தின் மூலம் நாடக உலகுக்கு அறிமுகமானார் அரசியல் தலைவரான அறிஞர் திரு. அண்ணாதுரை அவர்கள். இவர் எழுதிய ஓர் இரவு, வேலைக்காரி என்னும் சீர்திருத்த நாடகங்கள் 1945-ல் கே. ஆர். ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் நாடக சபைக்குப் பெரும் புகழ் தேடித் தந்தன. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி முதலான நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து வன்மை வாய்ந்தது. சொல்லழகும் பொருளழகும் துள்ளிவரும் ஒரு புதுமையான தமிழ் நடையை இவர் கையாண்டார்.

பல்வேறு நாடக சபைகள்

1944-ல் நவாப் இராஜமாணிக்கம் குழுவிலிருந்து விலகிய திரு. டி. கே. கிருஷ்ணசாமி அவர்கள் சக்தி நாடக சபாவைத் தோற்றுவித்தார். திரு. எஸ். டி. சுந்தரம் அவர்கள் எழுதிய கவியின் கனவு என்னும் தேசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/60&oldid=1540623" இலிருந்து மீள்விக்கப்பட்டது