பக்கம்:நாடகக் கலை 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

சரித்திரக் கற்பனை நாடகம் இந்த சபையின் முதல் நாடகமாக அரங்கேறியது. காட்சி அமைப்பு முறை களிலும் சக்தி கிருஷ்ணசாமி சில நல்ல வரவேற்கத் தக்க புதுமைகளைச் செய்தார். இவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியருமாவார். விதி, தோழன், ஜீவன் முதலிய நாடகங்களை இவர் தமது நாடக சபாவுக்கென்றே எழுதித் தயாரித்தார்.

காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் ஸ்ரீ ராம பால்கான சபா என்னும் ஒரு நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். இந்த நாடக சபை சில காலம் சிறப்பாக நடைபெற்றது. திருமழிசையாழ்வார், பக்த சாருக தாசர், தாகசாந்தி, குடும்ப வாழ்க்கை முதலிய சில புதிய நாடகங்கள் இந்தச் சபையினரால் அரங்கேற்றப் பெற் றன. இந்தச் சபையும் பல புதிய நடிக நடிகையரைத் தமிழுலகத்திற்குத் தந்தது.

சக்தி நாடக சபாவிலிருந்து விலகிய திரு.கே. என். ரத்தினம் அவர்கள் தேவி நாடக சபாவைத் தொடங்கிப் பல புதிய நாடகங்களை நடத்தினார். திரு. மு. கருணாநிதி எழுதிய மந்திரி குமாரி நாடகமும் திரு. ஏ.கே.வேலனின் சூறாவளி என்னும் நாடகமும் இச்சபையில் அரங்கேறிப் புகழ் பெற்றன.

சுதந்திரம் பெற்றபின்...

1947-ல் பாரதநாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் வரலாற்று நாடகமாகத் திரு. ரா வேங்கடாசலம் எழுதிய இமயத்தில் நாம் என்னும் நாடகத்தைக் கோவையில் எங்கள் சபை அரங்கேற்றியது. இது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தை அடிப்படையாகக் கொண்ட வீர உணர்ச்சி மிக்க நாடகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/61&oldid=1540626" இலிருந்து மீள்விக்கப்பட்டது