பக்கம்:நாடகக் கலை 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

நிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து நகரசபைகளும் நாடகக்கலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு வருகின்றன. தஞ்சாவூரில் நடைபெற்ற கலைக்காட்சியில் ஒரு முறை எங்கள் இராஜ ராஜ சோழன் நாடகத் திற்கு 21,000-த்துக்கு, மேற்பட்ட மக்கள் வந்திருந்து நாடகத்தைக் கண்டு களித்தார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

புதுமை நாடகங்கள்

மீண்டும் பல புதிய நாடகங்களை நாங்கள் நடித்தோம். நா.சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர், ரா.வேங்கடாசலம் எழுதிய மனைவி, எஸ்.டி.சுந்தரம் எழுதிய கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் கள்வனின் காதலி, டி.கே.கோவிந்தன் எழுதிய எது வாழ்வு, சி.வி.ஸ்ரீதர் எழுதிய ரத்த பாசம் முதலிய நாடகங்கள் சிறந்த சமுதாய நாடகங்களாக விளங்கின.

தமிழறிஞர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் தமிழ்ச் செல்வம் என்ற ஒரு அருமையான கல்விப் பிரசார நாடகத்தை எழுதியுதவினார். இந்த நாடகமும் எங்கள் சபையில் நடிக்கப்பெற்றது. திரு. அரு. ராமநாதன் எழுதிய இராஜ ராஜ சோழன் ஒரு மகத்தான சரித்திர நாடகம். தமிழ் மக்களை இந்த நாடகம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. அகிலன் எழுதிய வாழ்வில் இன்பம் என்னும் நாடகத்தை நாங்கள் நடித்தோம். இந் நாடகம் திருமண விழாவில் நடிக்கக்கூடிய ஒரு கருத்தமைந்த நாடகம்.

அமெச்சூர் நாடக உலகிலும் எத்தனையோ புதிய நாடகங்கள் நடிக்கப்பட்டுள்ளன. தஞ்சை குமரகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/65&oldid=1540642" இலிருந்து மீள்விக்கப்பட்டது