பக்கம்:நாடகக் கலை 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

விளையாடி மகிழ்வதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வீட்டிலே நாய்க்குட்டி இருக்கிறது. அது நம்மோடு விளையாடுகிறது. அப்போது நாயின் கூரிய பற்கள் நம் கையில் படுவதில்லை. கடிப்பது போல் நடித்து விளையாடுகிறது. சீறிப் பிராண்டும் பூனைக் குட்டியோடு நம் குழந்தைகள் பயமின்றி விளையாடுகின்றன!... தனது கூரிய நகங்களை உள்ளடக்கிக் கொண்டு அது எவ்வளவு அற்புதமாக விளையாடுகிறது! அது நடிப்பல்லவா?

குழந்தைகளின் நடிப்பு

அது போகட்டும்; பெரியவர்கள் கல்யாணம் செய்து கொள்வதைப் பார்த்து நம் குழந்தைகள் மரப்பாச்சிக் கல்யாணம் செய்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? தாய்மார்கள் சோறு சமைப்பதையும் பரிமாறுவதையும் பார்த்துக் குழந்தை கள் என்ன செய்கின்றன? விளையாட்டுச் சாமான்களை வைத்துக்கொண்டு புழுதி மண்ணை அள்ளிப் போட்டுச் சோறாக்கிப் பரிமாறிச் சாப்பிட்டு விளையாடுவதை நாம் எத்தனை தடவை பார்த்திருக்கிறோம்! அது என்ன? நடிப்புணர்ச்சிதானே?

'டே கிட்டு, இங்கே பாருடா நம்ம நொண்டி வாத்தியாரு நடையை!' நொண்டி நொண்டி நடிக்கிறான் சிறுவன்.

'டே ராமா, நம்ம வாத்தியாரு பாடம் சொல்லும் போது அவர் மூஞ்சி போற போக்கை இங்கே பாரு!' என்று முகத்தைக் கோணிக் கொண்டு வாத்தியாரைப் போல் நடிக்கிறான் அவன். இப்படியெல்லாம் சிறு வயதில் நடிப்பைத் தவறான வழியில் எத்தனை பேர் பயன்படுத்தியிருக்கிறோம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/71&oldid=1544900" இலிருந்து மீள்விக்கப்பட்டது