பக்கம்:நாடகக் கலை 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடனத்திற்கே ஏற்றது. இன்று நாம் நடிக்கும் வளர்ச்சி யடைந்துள்ள நாடகங்களில் அத்தகைய நடிப்பை நடித்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். இயற்கை நடிப்பு வேண்டும்.


நடிப்புக்குப் பயன் தரும் நூல்கள்

காலஞ்சென்ற திருவாளர் வி. கோ. பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள் தமது 'நாடக இயல்' என்னும் நூலில் அருமையான பல குறிப்புக்களைத் தருகிறார். செய்யுள் நடையில் அமைந்த நூல் இது. இதுவும் நடிப்புக் கலை பயில்வோருக்குப் பயன்படும் ஒரு அருமையான நூல். 'மதங்க சூளாமணி' என்று ஒரு நூல் இருக்கிறது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டது. நான் படித்திருக்கிறேன். அந்த நூல் இப்போது எங்கும் கிடைப்பதில்லை. இந்நூல் தவத்திரு விபுலானந்த அடிகளாரால் எழுதப்பெற்ற ஒரு அற்புதமான ஆராய்ச்சி நூல். நடிப்புக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். 'பத்மபூஷணம்' பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் "நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி" என்னும் ஒரு நூலை எழுதி யிருக்கிறார். நடிப்புக்கலை பயிலும் மாணவர்க்கு இதுவும் உபயோகமான நல்ல நூல்.


"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே"

என நன்னூற் சூத்திரத்தில் பவணந்தி முனிவர் இறுதியாகக் கூறியிருக்கிறார். எனவே, முற்கால நடிப்பிலக்கண விதிகள் மாறுவதும், புதிய நடிப்பிலக்கண விதிகள் புகுவதும் குற்றமல்லவென நமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/74&oldid=1545026" இலிருந்து மீள்விக்கப்பட்டது