பக்கம்:நாடகக் கலை 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையது’’

என்று பழம் பாடல் ஒன்று தெளிவாகக் குறிப்பிடு கிறது.

கண்களின் முதன்மை

நடிகனுடைய கண்கள்தாம் ம ற் ற உறுப்பு களைவிட மிகவும் முதன்மையானவை. கண்கள் இருளிலே ஒளியாக, நடிப்பிலே உயிராக விளங்கு கின்றனவென்று சொல்லலாம். சபையிலிருக்கும் ரசிகப்பெருமக்கள் நடிகனின் கண்களைத்தான் நன்கு கவனிக்கிருர்கள். அவைகளின் மூலம்தான் பாத்திரத் தின் தன்மையைப் புரிந்துகொள்ளுகிருர்கள். ஒவ் வொரு நடிகனும் பேசும் கண்கள் பெற்றிருக்க வேண்டும். *

- கண்ணெடு கண்ணிகண நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனு மில ’’ என வள்ளுவர் பெருமான் கூறுகிருர்,

எனவே கண்கள் நடிகனின் முதல் கருத்தாக இருக்க வேண்டும்.

மேடையில் நின்று நடிக்கும்போது ஒரு நடிகன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது வேறு எங்காவது சுழலவிட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.

அந்த நடிகன் ஏன் இவன் சொல்லுவதைக் கவனிக்கவில்லை ? சபையில் யாரையோ பார்க் கிருனே!... ஒ. அந்த அழகியைப் பார்க்கிருன் போலி ருக்கிறது. இல்லை, இல்லை, அமைச்சர் எப்படி ரசிக் கிருரென்று பார்க்கிருன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/76&oldid=1322439" இலிருந்து மீள்விக்கப்பட்டது