பக்கம்:நாடகக் கலை 2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

நடிக்கக் கூடியவள். ஆனால் ஒரே ஒரு குறை. அவள் அழுவது மாத்திரம் சிரிப்பதுபோல் இருக்கும். அங்கவை தன் நிலையைச் சொல்லி அழும்போது அவள் சிரித்ததாகவே சபையோரில் பலர் எண்ணிக் கொண்டார்கள்.

மறுநாள் நாடகத்தைப் பற்றி விமர்சனம் செய்த ஒரு பத்திரிகையாளர், 'இந்த உணர்ச்சியான கட்டத்தில் அங்கவை சிரித்தது உணர்ச்சியையே கெடுத்துவிட்டது. அதுவும் ஆசிரியராகிய ஷண்முகமே ஔவையாராக நிற்கும்பொழுது சிறிதும் லட்சியமின்றி இந்தப் பெண் சிரித்தது மன்னிக்க முடியாதது' என்று எழுதிவிட்டார்.

நான் அவரை நேரில் சந்தித்து அந்தப் பெண்ணின் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சொன்னேன். பிறகு அவள் படிப்படியாக அந்தத் தவறைத் திருத்திக் கொண்டாள். அப்புறம் தொடர்ந்து நடந்த நாடகங்களில் நேராகச் சபையைப் பார்த்து அழாமல் ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு ஏதோ ஒருவகையாகச் சமாளித்தாள்.

எனவே, இது போன்ற குற்றங்களை நடிப்புக் கலைபயிலும் மாணவர்கள் தொடக்கத்திலேயே, பயிலும் போதே நன்கு கவனித்துத் திருத்திக் கொள்ள வேண்டும்.

குரல் பயிற்சி

குரல் பயிற்சி மிகமுக்கியமான ஒன்று. குரல்வளமாக இருந்தால் மேடைக்கு நன்றாக இருக்கும். பேசும் போது மென்மையாகப் பேச வேண்டிய வார்த்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/79&oldid=1545050" இலிருந்து மீள்விக்கப்பட்டது