பக்கம்:நாடகக் கலை 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உண்டு; வன்மையாகப் பேசவேண்டிய வார்த்தைகளும் உண்டு. வார்த்தைகளிலே ஏற்றத் தாழ்வு இருக்கவேண்டும். குழைவு இருக்கவேண்டும். அன்பு காட்டிப் பேசுவதும் ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரியவேண்டும். இவ்விதக் குரல் பயிற்சியில்லாதவர்கள் சிறந்த நடிகர்களாக இருந்தும் கூட வானொலி நாடகங்களிலே படுதோல்வி அடைகிறார்கள். கேட்கும் நாடகமாக இருப்பதால் வானொலி இப்படிப்பட்டவர்களை மிக எளிதாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எனவே, பல்வேறுபட்ட உணர்ச்சிகளை எளிதாகக் காட்டக் குரல் பயிற்சி மிகவும் முக்கியம்.

அதிலும் சிறப்பாக, ரகசியம் பேசுவதற்குக் குரல் பயிற்சி மேடைக்கு மிகவும் தேவை. சில நேரங்களில் நடிகர் சபைக்குக் கேட்கும்படியாகவே ரகசியம் பேச வேண்டியிருக்கும். மனோகரன் நாடகத்தில் அந்த மாதிரி பல கட்டங்கள் உண்டு. சபைக்கும் கேட்க வேண்டும்; அதுவே ரகசியமாகச் சொல்லுவது போலவும் இருக்க வேண்டும். இதற்குக் குரல் பயிற்சி இல்லாவிட்டால் முடியாது.

தெளிவான பேச்சு

அடுத்தபடியாக பேச்சிலே தெளிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலே பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான பேச்சு இருக்கிறது. இதை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம. இல்லை யானால் உணர்ச்சி, நடிப்புத்திறமை, குரல்வளம் எல்லாவற்றையும் இந்தத் தெளிவு இல்லாத பேச்சுக் கெடுத்துவிடும். உணர்ச்சி பாவத்தோடு அற்புதமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/80&oldid=1545406" இலிருந்து மீள்விக்கப்பட்டது