பக்கம்:நாடகக் கலை 2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

த&வி : என்னை 'கினைத்தேன்’ என்ருல் எ ன் ன பொருள் ? கினைவு என்பது எப்பொழுது வரும்? மறந்த பிறகுதானே ? நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள்; அப்புறம் திடீர் திடீரென்று கினப்பு வரும். அப்படித்தானே? மறக்காமலிருந்தால் நினைப்புக்கே இடமில்லையே? என்னை மறந்த சமயத்தில் யாரை கினைத்தீர்களோ ?

தலைவன் : அடி அன்னமே! உன்னை மறப்பதா? அது என் உயிரையே மறப்பது போலல்லவா? உலகில் உன்னையே நான் அதிகமாக நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா?

தவிை : உன்னையே அதிகமாக நேசிக்கிறேன் என்ருல் கொஞ்சமாக நேசிப்பது யாரையோ? அவர்கள் எத்தனை பேரோ? எங்கிருக்கிருர்களோ ?

தலைவன் : தங்கமே! இப்படிக் குற்றம் கண்டு பிடித் தால் நான் என்ன செய்வது? என் உள்ளத்தில் உன் ஒருத்திக்குத்தானே இடமுண்டு. இந்த உடலில் உயிர் இருக்கிற வரையில் இந்தப் பிறவியில் கான் உன்னைக் கைவிடமாட்டேன்.

தலைவி : கண்ணுளா, இந்தப் பிறவியில் என்னைக் கைவிடுவ தில்லை என்று சொன்னீர்களே ! அப்படியானல் அடுத்த பிறவியில் யாரை அடையத் தவம் செய்கிறீர்களோ?

இந்த உரையாடல் திருக்குறள் காமத்துப்பாலிலுள்ள மூன்று குறட்பாக்களை அடிப்படையாக வைத்து எழுதப்

பெற்றது. இதிலுள்ள பெரிய எழுத்தில் குறிப்பிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/83&oldid=1322447" இலிருந்து மீள்விக்கப்பட்டது