பக்கம்:நாடகக் கலை 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் அதே நேரத்தில் தாளுகவும் விலகி நின்று பாத்திரத்தைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண் டும். மறந்தும் மறவாத நிலையில் நின்று நடிப்பவன் தான் சிறந்த நடிகனுகக் கருதப் பெறுவான்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இவை இரண்டும் என்னுடைய கற்பனை அல்ல: உண்மைச் சம்பவங்கள். இன்னும் இவை போல எத்தனையோ நிகழ்ச்சிகள் நாடக மேடையில் நடைபெற்றிருக்கின்றன.

உணர்ச்சிவசப்படுதல் தவறு

நாடகத்திலே உணர்ச்சியான ஒரு கட்டம். பாண்டி யனுக்கும் சோழனுக்கும் வாட்போர் நிகழுகிறது. கத்தி களை ஒத்திகைப்படி இருவரும் வீச வேண்டும்; இல்லா விட்டால் என்னதான் மழுங்கிய கத்தியாயிருந்தாலும் ரத்தக் காயங்களுடன் நிற்க வேண்டியதுதான். பாண் டியனுகவும், சோழனுகவும் வேடம் புனைந்த நடிகர்கள் நான் முன்பு சொன்ன நரசிம்ம நடிகரைப் போல் உணர்ச்சி மேலீட்டால் மெய்மறந்து பாத்திரங்களா கவே மாறி வாள் வீசத் தொடங்கிவிட்டால் விபரீத மல்லவா விளையும்...அதை நடிப்பென்று எப்படிச் சொல்லுவது?

பாத்திரமாகவும்தானுகவும் நிற்றல்

மேடையில் நடிகன் மட்டும் நடிக்கவில்லை. சட்டம் துணி, சாயம், பலகை, ஒளிவிளக்கு எல்லாமே நடிக் கின்றன. மலையாகவும், கடலாகவும், மலர்ப் பூங்கா வாகவும், மணி மண்டபமாகவும் காட்சி அளிப்பவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/90&oldid=1322454" இலிருந்து மீள்விக்கப்பட்டது