பக்கம்:நாடகக் கலை 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்து பணி புரிந்த உயர்திரு ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினர்கள். அன்றிரவு அவ்வையார் நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு ஆர். கே. சண்முக ஞர் அவர்கள் எனக்கு 'அவ்வை” என்று சிறப்புப் பட்டம் அளித்தார்கள்.

அந்தச் சிறப்புக்குரிய அவ்வையார் நாடகத்தில் நான் அவ்வையாராக அரங்கில் நடிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் சண்முகமாகவே இருந்து அவ்வையின் பாத்திரத்தைக் கண்காணித்து வரு கிறேன். கூன் முதுகு பொக்கை வாய், கை நடுக்கம், தாடை அசைவு, முகத்தின் சுருக்கம், தளர் நடை, பெண் குரல் எல்லாவற்றையும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கும். இவற்றில் எதை மறந்தாலும் அவ்வையாரின் வேஷம் கலந்துவிடு மல்லவா? இவை மட்டுமா? அதே நேரத்தில் மேடை யிலே திரை விழும் இடங்கள், ஒளி அமைத்திருக்கும் இடங்கள், ஒலிக்கருவி வைத்திருக்கும் இடங்கள் இன்னும் எத்தனையோ விஷயங்களை அவ்வையார் நினைவில் வைத்திருந்தால் அல்லவா சபையோர் நாடகத்தைக் கண்டு ரசிக்கலாம் !

எனக்கே ஒரு சமயத்தில் பெரிய அபாயம் ஏற் பட்டது. கடவுட் செயலால் தப்பினேன். 1948ல் சென்னை ஒற்றைவாடையில் அவ்வையார் நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்றது; ஒரு நாள் காலஞ்சென்ற தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் தலைமை; அன்று பெருங் கூட்டம்; மேடையில் உழவனும், மனைவியும் அவ்வையாரோடு உரையாடும்

gu.—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/95&oldid=1322459" இலிருந்து மீள்விக்கப்பட்டது