பக்கம்:நாடகக் கலை 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

காட்சி நடந்து கொண்டிருந்தது. நல்ல நகைச்சுவை யோடு கருத்தும் நிறைந்த காட்சி அது. --

அவ்வையார் கடைசியாக அந்த உழவர் தம்பதி களை வாழ்த்திவிட்டு உள்ளே போகிருர். நான் போகும் போது பெரியார் திரு. வி. க. அவர்கள் எப்படி ரசிக்கிரு ரென்று கொஞ்சம் ஜாடையாகப் பார்த்து விட்டுப் போனேன். அவ்வளவுதான். வழக்கம் போல் விளக் கணக்கப்பட்டது. அடுத்த காட்சிக்குரிய வீதித் திரை கீழே விடப்பட்டது. கனமான மர உருளையோடு கூடிய அந்தத் திரை நேராக என் தலையைப் பதம் பார்த்தது. தவறு என்னுடையதுதான். திரு. வி. க. அவர்களைப் பார்க்கும் ஆவலில் கொஞ்சம் வழிதவறி திரைக்கு நேராக வந்துவிட்டேன். எப்போதும் வேக மாகத் திரைவிடும் காட்சி அமைப்பாளர் அன்று கடவுள் செயலாகக் கொஞ்சம் மெதுவாக விட்டார். வழக்கமான வேகத்தில் திரை விழுந்திருந்தால் என் மண்டை சிதறியிருக்கும். தலையில் டோப்பாவும் இருந்ததால் ஒருவாறு பிழைத்தேன். ஒரு நிமிஷம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மயக்கமாயிருந்தது. அப்புறம் ஒரு வாரம் வரை அந்த வலி யிருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் மேலும் கவனம் எடுத்துக் கொண்டேன் என்று சொல்ல வேண்டிய தில்லை.

நடிகனும் ஒரு அவதானி

அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்று பெரும் புலவர்கள் அவதானம் செய்து பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு அற்புத மாக விடை தருகிறர்களல்லவா? நடிகனும் ஏறக் குறைய ஒரு அவதானியாகவே தன்னை ஆக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/96&oldid=1322460" இலிருந்து மீள்விக்கப்பட்டது