பக்கம்:நாடகக் கலை 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இந்த உயர்ந்த நடிப்பைக் காணலாம். நடிபபு என்றும் நடிப்பாகவே இருக்க வேண்டும். அது உண்மையாகி விடக் கூடாது. நான் பல ஆண்டு களாகப் பெற்ற நாடக மேடை அனுபவம் இந்த அறி வுரையைத்தான் கூறுகிறது.

தோற்றப் பொலிவு

அடுத்தது தோற்றப் பொலிவு. நடிப்புத் திறமை, குரல் வளம், பேச்சுத் தெளிவு எல்லாம் இருக்கலாம். ஆனால், தோற்றம் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் வெற்றி பெற இயலாது.

ஒப்பனையின் மூலம், அதாவது மேக்கப்பின் மூலம் ஓரளவுக்குத்தான் தோற்ற மாறுபாடு செய்ய முடியும். கூடிய வரையில் பாத்திரத்திற்கேற்ற தோற்றமிருக் கிறதாவென்று பார்த்துத் தேர்வு செய்வது நல்லது.

என் தம்பி பகவதி இராஜ ராஜ சோழனுக நடிக்கிருர். நான் அவருடைய மகன் இராஜேந்திர சோழனுக நடிக்கிறேன். அவரைவிட நான் ஐந்து வயது மூத்தவன். ஆளுல், அவரது தோற்றம் எடுப்பாக இருக்கிறது; குரலும் கம்பீரமாக இருக்கிறது; உயரமும் என்னைவிட அதிகம். இரத்த பாசம் நாடகத்திலே தம்பி பகவத் எனக்கு அண்ணன், நான் தம்பி. என்ன செய்வது? அவருக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அந்தச் சரீரமும் சாரீரமும்.

காப்பியடிப்பது தவறு

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறையும் சரீரத் திற்குத் தக்கவாறு அமைகிறது. அது ஒவ்வொருவருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/98&oldid=1322463" இலிருந்து மீள்விக்கப்பட்டது