பக்கம்:நாடகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அழகு : (அம்பலத்தைப் பார்த்து) குழந்தை கேக்குது. A. போயேன், உன் உசிரு என்ன வெல்லமா ... அம்ப : கருப்பட்டி, வாயேன். இரண்டு பேருமா சேந்து போவோம். ஒரே மிதி, சதக். அப்புறமா இந்த லோகத்தைவிட்டு இந்திரலோகத்துக்கே போவோம். மீனு : பயந்தாங்கொள்ளிகள்! [என்று அவர்களைப் பாத்து எள்ளிநகை யாடிவிட்டு .யானையை நோக்கிப் போகிருள். அழகும் அம்பலமும் தடுக்கப் போகிருர். குழந்தை ஒடி யானையின் துதிக்கையைப் பற்றிக் கொள்கிருள். துரத்திச்சென்ற இரு வரும் துாரத்திலேயே நின்று விடுகிரு.ர்கள்.) (மீன. அவர்களைப் பார்த்து கிண்டலாக, எங்கே என்னைப்பிடிங்க பாக்கலாம். என்று இப்புறம் அப்புறம் ஒடுகிருள். அப்புறமும் இப்புறமும், யானைக்கு அடியிலுமாக ஒடியாடி ஆட்டம் போடுகிருள். அழகும் அம்பலமும் பயந்து நடுங்கி குழந்தையை பிடிக்கமுடியாமல் தங்களைத் தாங்களே பிடித்துக்கொள்ளுகிரு.ர்கள். கடைசியாக குழந்தை யானையின் துதிக்கையிலமர்ந்து எம்புகிருள். யானை அவளை ஊஞ்சலாட்டுகிறது. மற்றக்குழந்தைகள் மகிழ்ச்சிபெருக்கோடு கைகொட்டி ஆரவாரிக்கின்றனர். மீன இறங்கி குழந்தைகளிடம் ஓடிவருகிருள். யானை மீளுவுக்குப் பந்து பொறுக்கிப்போடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/104&oldid=781496" இலிருந்து மீள்விக்கப்பட்டது