பக்கம்:நாடகங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய : அப்படிக் கேள் (என்று சொல்லிவிட்டு) எப்போதுமே மேலிடத்துப் பிள்ளைகளுக்கெல்லாம் மேலேகொஞ்சம் காலி. அதிலும் அரசிளஞ்செல்வியை அதட்டமுடியுமா. அடிக்க முடியுமா. (எனத் தன் குழந்தையைக் காட்டிவிட்டு] அங்கே பாடம் வரல்லேன்ன இங்கே அடிபட, குட்டுப் பட, முட்டிப்போட! எப்படி என் புத்தி! (என்று கூட்டிவந்த பிள்ளைகளை அடித்தும் குட்டியும் முட்டிப் போடவும் வைத்தும் காட்டுகிருன். இதைப் பார்த்த அம்பலம்.) அம்ப : நல்ல ஞானம். யாருக்கு வரும் பெரிய : ஆகா ... என் பெயரே சிவஞானம்தான் (அந்த சமயம் பொம்மைகளை சரம்சர மாகச் சேர்த்துக் கொண்டு ஒரு ஒலைப் பெட்டியுடன் ஒருவர் வருகிரு.ர். அவரைப் பார்த்து அம்பலம்.) அம்ப : வாங்க. பொம்மைக்கடையோடவே வந்திட்டீங் дsGrтгт? பொம்மை : புதுமையான கேள்வி! முறையோடு வந்திருக்கிறேன். நான் எழுத்தெண்ணிப்பாடம் சொல்பவனல்ல. கலை விளக்கத்தோடு கற்பிக்க வந்தேன் * - என்று தன்னிடமுள்ள ஒவ்வொரு பொம்மைகளை எடுத்து நீட்டிக்கொண்டே ஆடு என்ருல் ... மாடுஎன்ருல் என்று பொம்மைகளைக் காட்டுகிரு.ர்.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/107&oldid=781502" இலிருந்து மீள்விக்கப்பட்டது