பக்கம்:நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. து.ாது : நாங்கள் புறக்கடையில் போக விட்டுப் பெருகிவரும் காவிரி! சோழ நாட்டுக் காவதம் இருபத்து நான்கையும் கனி குலுங்கும் சோலை யாக்கித் தந்திருக்கிறது. இந்த வளத்துக்கும் பெருமைப் படுகிருர் எங்கள் அரசர். அர : மகிழ்ச்சி தூது : ஒரு உரிமையையும் கேட்கிரு.ர். கூத் : தமிழ் படிக்கவோ? எங்கள் தார் வேந்தன் அவையில் அங்கம் வகிக்கவோ? புலிக்கொடி யின் நிழலிருக்கவோ? துரது : துடுக்கென்று எண்ண வேண்டாம்-துரதா கச் சொல்ல வந்ததைச் சொல்லுகிறேன். காவிரியின் வெள்ளத்துக்கு வரி கேட்கிரு.ர். அர : கூத்தரே!...இது பொறுக்காத வார்த்தை... வரிப்புலியை நரிமேய்த்தது உண்டென்ருல் சொல்லுங்கள்! கதிரும், நிலவும், காற்றும், நீரும் உலகப் பொதுவென்ற மரபுக்கு அப்பால், உரிமை கேட்ட ஆணவத்தை மன்னிப்பதா? தலைக் காட்டுக்குத்தனியாக இந்த தலைக்கணம் இருக்க முடியாது...பின்னல் சளுக்கன் (சத்யாசிரயன்) நின்ருல்...என் தந்தை வழிப்பங்காளி அவன்... ஹொய்சளன் இருந்தால் சோழர்க்கு என்னைப் போல் மகள் வழிப்பேரன் அவன்! அந்தப் பகை என்ருல்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/11&oldid=781508" இலிருந்து மீள்விக்கப்பட்டது