பக்கம்:நாடகங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அழகு முதல்லே இந்த வாளுக்கு உன் நெஞ்சிலே இடம் கொடு. (என வாளே ஒங்குகிருள் அம்பலம் ஒடுகிருன்) காட்சி எண்: 28 அரச மாளிகை அரசன் ஆழ்ந்த சிந்தனையோடு இருக்கிருன். அரசியின் வருகையை அவன் கவனிக்கவில்லை அரசி ; பிரபு என்ன சிந்தனையோடு இருக்கிறீர்கள்? அரசன் : அன்று நிறுத்தி வைத்த அஸ்வமேத யாகத்தை மீண்டும் நடத்தலாமா என்று யோசிக்கிறேன். அரசி : அதற்கு முன்னுல் நாம் யோசிக்க வேண்டிய ஒரு பொறுப்பிருக்கிறது. அரசன் : எதைப்பற்றிச் சொல்லுகிருய் தேவி. அரசி : மகளை நாட்டுக்குக் காவலாக்கி விட்டால் போதுமா? அவளுக்குக் காவல்? அரசன் : ஏன் அவள் வீரத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா? அரசி அவள் வாழ்க்கையிலே எனக்கு கவலையிருக்கிறது. ஒரு பெண் நாட்டிற்கு அரசி ஆலுைம் ஒரு நாயகனுக்கு மனைவி ஆல்ைதான் அவள் வாழ்க்கை நிறைவு பெறும். அரசன் ஆம், உன் தாயுள்ளத்தை நானும் உணருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/121&oldid=781534" இலிருந்து மீள்விக்கப்பட்டது