பக்கம்:நாடகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சோழன் : இருக்கட்டும் அவளை மணக்க வேண்டியவன் பார்க்க வேண்டிய திருஉருவம். (எனக் கூறிவிட்டு திரும்புகிருன். அப்போது அங்கு சோழன் மகன் வருகிருன். வந்த மகன் தந்தையைப் பார்த்து) மகன் : தந்தையே வணக்கம் சோழன் : மதுரையிலிருந்து பெண்ணின் படத்தோடு புலவர் வந்திருக்கிரு.ர். மகன் : ஒப்புதல் கொடுக்க வேண்டியது தங்கள் விருப்பம் தந்தையே. சோழ : அதை ஒப்புக்கொள்ள வேண்டியவன் நீயல்லவா? முதலில் படத்தைப் பார். (புலவர் பிரிக்கிரு.ர். அதைப்பார்த்த சோழ மகன் திடீரென பயங்கரமாக அலறு கிருன்..அவன் கண்ணுக்கு அறையவரும் பேய்போல் ஆங்காரமாக தெரிகிறது). இளவரசன் : அது பெண்ணின் படமல்ல. பேயின் வடிவம் (படத்தை எட்ட வீசுகிருன். அரசன் கண்ணுக்கும் பேயாக சிரிப்பதுபோல் தெரிகிறது) அரசன் . புலவரே நீர் புலவர் என்பதால் என் வாள் உறையோடு இருக்கிறது. நீர் உயிரோடு இருக்கி நீர்கள். மலையத்துவஜனுக்கு என்ன ஆணவம். மணத்துக்கு நாள் குறிக்கவந்திரா? போருக்கு நாள் குறித்து அனுப்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/124&oldid=781540" இலிருந்து மீள்விக்கப்பட்டது