பக்கம்:நாடகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடி չ, ம் வே ந்தே I கலை வளர்க்க, சிலை எடுக்க, ஆறை நகர்க்கு என விடுத்தீர்...அங்கே பகை வளர்க்க கொலை நடத்த படை எடுக்க வகை பார்த்திருந்தார். பதை பதைத்தேன். காவிரியின் பெரு வெள்ளம் கல்லணையை உடைத்ததற்கு நம்மை அவர் குற்றம் சொன்னர். நட்டத்துக்கு விலை கேட்டார். நான தன் வளத்துக்கு வரி கேட்டேன். சிரித்தே கழுத் தறுக்கத் தெரிந்த சோழன் சினந்தான்! சளுக்கர் உறவை அறுத்து ஹொய்சளர் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் ... இன்றேல் சோழர் பகைத்து வருவாரென்ருர். இது நேரம் வந்திருப்பார்கள்...மற்றபடி என் சூழ்ச்சி வடி பெண்ணைக்கு இப்பால் நின்றிருக்கும் சோழர்களை வென்றழிக்க சளுக்கரைப் படைஎடுக்கச் செய்திருக் கிறேன். நான் ஹொய்சளப் படையுடன் வருகின் றேன். வந்து விட்ட பகைக்கு நீங்கள் சிந்திக்க வேண்டாம். மானம் பெரிது. (என்றிருந்தது ஒலையில்) குரல் : தமிழ் மூன்றுக்குத் தலைவன் உலகளந்த நாயகன் குலோத்துங்கப் பேரரசனின் வான் விடுத்த துரது வந்திருக்கிறது. செம்பியன் மழவராயன் சேனதிபதி வருகின்ருர்! என்ற அறிவிப்போடு சோழ சேனதிபதி அவைக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/14&oldid=781576" இலிருந்து மீள்விக்கப்பட்டது