பக்கம்:நாடகங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சீர் வரிசை பொருள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீதியளவுக்குக் கொலு வைக்கப்படுகின்றன. மலை யளவுக்குச் சோற்றுமுட்டுகள் குவிந்திருக்கின்றன. மடுவளவுக்கு பாயசம் தேங்கியிருக்கிறது. ரசம் குழம்பு வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஏரியா கவும் தெரிகிறது படை வரிசைபோல் பந்தி வரிசை நடந்தபடி இருக்கிறது. கன்னிப் பெண்கள் தங்கள் பெண்ணின் பெருமையைப் பேசி பேசி கும்.மியடிக் கிரு.ர்கள். காளையர்களின் உயிலாட்டம். ஒரு பக்கம், மக்களை வாழ்த்தியும், வைதும் பாடும் நையாண்டி வாதங்கள், ஒரு பக்கம். ஆக மணவிழா மகிழ்ச்சி வெள்ளமாக பெருகி கொண்டிருக்கிறது. அழகர் மீனாட்சிக்கு சீதனமாக ஆயிரம் பசுக்களோடு வந்து கொண்டிருக்கிருர். இந்தச் சூழ்நிலையில் மணமகன் அழைப்பு நடைபெறுகின்றது. மணமகன் வருகின்ற வழியில் இருமருங்கும் மங்கலப் பெண்கன் திருவிளக்கேந்தி நிற்கின்றனர். வாத்தியங்கள் வகை வைகயாக வரிசைப்படுத்தப்பட்டு அணி வகுப்பு போல் இருக்கிறது. அலங்கார வளைவுகள் சோமசுந்தரன் மண மேடைக்கு வருகிருர், அவ ரோடு பிள்ளை வீட்டாராக தேவர்கள் வருகிருர் கள். நான்முகன் புரோகிதராக மண வேள்விக்கு முன்னர் அமர்ந்து வேதம் சொல்லி வேள்வி வளர்க் கிருர். தோழியர்களாக இலக்குமியும் கலைமகளும் மீனட்சியை மண மேடைக்கு அழைத்து வருகிருர் கள். அழகன் மீட்ைசியை சுந்தரரிடம் தாறை வார்த்துக் கொடுக்கிருர். காஞ்சன மாலை ஆனந்தக் கண்ணிரோடு.... காஞ்சனே கெளரி எல்லாம் உன் கருணையே கருணை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/140&oldid=781578" இலிருந்து மீள்விக்கப்பட்டது