பக்கம்:நாடகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காட்சி எண் 44 மாளிகையின் மற்றெரு புறம் மீட்ைசியும் சுந்தரரும் மற்ருெரு புரத்தில் உப்பரிகையில் நின்றபடி ஊர்வலம் பார்க்கின்றனர். உணவுப் பொருள்கள் மீந்து கிடப்பது அவர்களின் கண்களுக்குத் தெரிகிறது. சுந்தரர் சிரிக்கிரு.ர். மீனு : ஏன் சுவாமி. அளவு தெரியாமல் சமைத்துக் கிடக் கிறது என்று சிரிக்கிறீர்களா? சுந் : இல்லை மீந்துவிட்ட உணவெல்லாம் தின்று தீர்க்க வேண்டியது பிள்ளை வீட்டாரின் பொறுப்பு என்கிருர் அகத்தியர். மீனு : விணுகக்கூடாது என்றுதான் நானும் விரும்புகிறேன். கந் குண்டோதரா... -- = (குண்டோதரன் தோன்றி நிற்கிருன்.) குண்டோதரன் : பிரபு... சுந் : பெண்வீட்டார் விருந்து எப்படி என்று ருசி பார்த்துச் சொல். குண் , பிரபு நீங்கள் கூப்பிட்டதுமே எனக்குப்பசி ஆரம்ப மாகி விட்டது. (வணங்குகிருன். ஆசிர்வதிக்கிருர். அவன் அடிவயிற்றில் ஒரு தீக்கொழுந்து எரிய ஆரம்பிக்கிறது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/143&oldid=781582" இலிருந்து மீள்விக்கப்பட்டது