பக்கம்:நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4 ஏறுகின்ற வேகத்துக்கு அணில் தோற்றது.களை மிகுந்த அவளுக்குக் கிள்ளை தோற்றது. இளம் பிள்ளைகள் அவள் வித்தைக்குக் கூடினர். இளமைவந்த பிள்ளைகள் அவள் இளமைக்குவாய் பிளந்து நின்றனர். கிழவர்கள் சென்று விட்ட இளமையை நினைவுக்கு இழுத்தனர். பெண்கள் ஊருக்குள் ஒரு மோகினி வந்து விட்டாள் என முணுமுணுத்தனர். சித்திரக்காரன் அவள் நிறத்துக்குச் சாயம் குழைத்துப் பார்த் தான் சிற்பி அவளைச் செதுக்கிப் பார்க்க சந்தனக் கல்லெடுத்து வந்தான். கவிஞன் இது வரை வேறு புலவன் எழுதாத வார்த்தைகளால் அவளை எழுதிப் பார்த்தான் ஆக, ஊரெங்கும் அவளே பேச்சு! கூத்தரும் வேந்தனைத் துழா விஞர்! கூத்தர் : வேந்தே !... ஆயகலைகள் அறுபத்து நான்கில் கழைக் கூத்தும் ஒன்றே! அவளை அம்பலத்தில் ஆட வைத்து ஏதோ கொடுத் தனுப்புங்கள். - அவளேன் தெருவெல்லாம் ஆடித் திரிய வேண்டும்? அரசர் : நம் ஆண்டவனே சுடலையில் ஆடியிருக் கிருன். இவள் தெருவில் ஆடினல் என்ன; கூத் : போக்குவரத்துக் கெடுகிறது. மக்கள் கவனம் சிதறுகிறது. பள்ளிக்குப் பிள்ளைகள் தப்புகின் றனர். எனக்கே சில சமயம் பாட்டெழுத வரவில்லை. அர . அவ்வளவு கலை வள மா? என்ன சாயல்? ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/21&oldid=781612" இலிருந்து மீள்விக்கப்பட்டது