பக்கம்:நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 மலே : அவளே சொன்னுள் ! அர : ஊருக்குத் தெரியாத உறவுக்குப் பிறந்தவ ளாக இருப்பாள்!... எனச் சொல்லிக் கொண்டு, மன்னவனும் வந்து கலந்து கொண்டான் அவர்கள் பேச்சில். சேஞ : அரசே, மலையபெருமாள் ஒரு புதுச் செய்தி கொண்டு வந்திருக்கிருன். அர கழகுமலை இருளப்பனைப் பற்றி என்ருல் எனக்கும் தெரியும். அவன் கன்னம் வைக்க வரவில்லை; காதலிக்க வந்தவன் என்று திரும்பி விட்டேன்: மலே நான் முற்றும் தொடர்ந்தேன், ஒட்டும் கேட்டேன். அா : முன்னம் அவள் கூத்துக்குத் தாளம் போட்டு வேஷத்தை இழந்தாய்; காதலுக்கு இடையில் புகுந்து காதை இழந்து விடாதே!. விடுகாதழகிய பெருமாள் என்ருெரு புலவர் இருக்கிருர், போதும். காதில்லா மலைய பெருமாள் என்ற பெயர் உனக்கு வேண்டாம்: என நகைத்தார். மலை : உங்களுக்கு நான் ஒரு சிரி க்கும் பொருள். அவ்வளவுதானே! மகிழ்ச்சி, என அவனும் சிரித்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/34&oldid=781639" இலிருந்து மீள்விக்கப்பட்டது