பக்கம்:நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கள் : உறக்கத்தில் கனவு காண்பது உலகத்து இயற்கை! நீ மயக்கத்தில் கனவு காண்பவள். பை : சோழனுக்குக் கோட்டை பெரிது படை மிக அதிகம். f கள் : என் ஆற்றல் அதனிலும் பெரிது; நீ கேட்ட கடகம் இதோ பார்! எனக் கொடுத்தான். ஆவேசப்புயல் கூளத்தை வாரி எடுப்பது போல் எடுத்தாள். இருப்புக் குறடு நெரிப்பது போல் கடகத்தை நெளித்தாள்- பற்கள் நற நறத்தன. அவள் வேதனையின் தொடுவானத் துக்கு அப்பால், குலோத்துங்கனின் போர்க்களங்கள் தெரிந்தன. அவள் தந்தையிழந்த தங்கமுடி தெரிந்தது, தழலான சுடலைத் தி கொழுந்து விட்டு எரிந்தது. கருங்கல்லெடுத்து நொறுக்கிள்ை: து.ாள் துள்ளாக அள்ளி ஊதினுள். பைர : வீரமணிக்கடகம் இதோ து.ாள்: துரள். எனச்சிரித்தாள், தொடர்ந்து: கள்வர் கோமானே, கழுகு மலைத் தேவனே: என் பகை முடிக்க வந்த தெய்வம் நீ... கள் : பகை என்ன சொல்? பழி என்ன கூறு.? பை : நான் ஆடுகள மகளல்ல: தலைக்காட்டு நங்கை! தார் வேந்தன் கங்கனுக்கு ஆவி நிகர் மகள்: பகை முடிக்க வந்த கொல்லிப் பாவை! பழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/47&oldid=781668" இலிருந்து மீள்விக்கப்பட்டது