பக்கம்:நாடகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கூத்தர் மாளிகையில் ஏடும் எழுத்தாணியு மாக இருந்தார். கிளியூர் மலையபெருமாள் ஒலேயுடன் வந்தான். மலை : பெருந்தகையே, விருந்து வந்திருக்கிறது. மன்னருக்குத் திருமுகம் கொண்டு வந்தனர். அவரில்லை- இங்கு அழைத்து வந்தேன். ஒலை தந்தான். கூத் : மகிழ்ச்சி. சிவஞானக்கிழவன்: வணக்கம்... குவாளல புரத்தி லிருந்து வருகிருேம். கூத் : உங்கள் அரசர் நன்மைக்கு ஆண்டவனை வேண்டுகிறேன். கிழ நன்றி! அமராபரணன் சீயகங்கனுக்கு நான் சித்தாந்த போதகன், சிவஞானக் கிழவன் என்பார்' என்னை. இவள் நன் னுால் பவநந் திக்கு மகள். எழுத்தலங்காரம் என்பது இவள் பெயர். கூத் : வாழ்க. கிழ : உங்கள் பரணி கேட்க வந்திருக்கிருேம். கூத் : இன்னும் முற்றுப் பெறவில்லை. கிழ : நீங்கள் முடிக்கும் வரை உடனிருந்து சுவைத் திருப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/51&oldid=781678" இலிருந்து மீள்விக்கப்பட்டது