பக்கம்:நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னெழுத்து காவிரி தமிழர்களின் பழமைக்கும் பண்பாட்டுக்கும் பிறப்பிடம் காலம் கடந்து கொண்டேயிருக்கிறது காவிரி காலத்தை வென்று * நடந்தாய் வாழி காவேரி?’ என்று நடந்து கொண்டேயிருக்கிறது! அந்த ஆற்றின் ஒரத்திலே நடந்த வல்லரசுகள் எத்தனே, எத்தனை வானுயர்ந்த கோட்டைகள் எத்தனை, எத்தனை வளர்ந்த கலைகளின் செழுமைக்கும், சிறப்புக்கும் எல்லை ஏது? அந்த ஆற்றின் ஒட்டத்துடன் போட்டியிட்டபடி வரலாற்றின் ஏடுகள் புரண்டு வருகிறபோது, ஒரு சில பக்கங்களில் காணப் பெறும் சில குறிப்புகளின் விளக்கமே, இந்த நாடகம். நாடக மாந்தராக நான் அறிமுகப் படுத்தி யுள்ள குலோத்துங்கன், கூத்தர் கங்கன் மகள் கன்னரதேவி, மழவராயன் நுளம்பன் காங்கேயன் அனைவரும் வரலாற்று நாயகர்களே. பழையாரை, பட்டீச்சுரம், புறம்பியம், தலைக்காடு ஆகிய இடங்களும் இன்றுமுள்ள வரலாற்றுத் தடங்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/6&oldid=781693" இலிருந்து மீள்விக்கப்பட்டது