பக்கம்:நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆனி முதல் நாள் ஆறை நகர்க்கு வந்தது! தேர் நடத்தும் வீதி எல்லாம் தாரெடுத்த வாழைகள்... போரெடுத்த வீரர் போல் அணி வகுத்து நின்றன. தின்னை வாரமெல்லாம் தென்னங்குலை வரிசை. பாக்கும் நுங்கும் பந்தலிட்டு நிழல் செய்த ன! குருத்தோலைப் பின்னலும், கொத்து மஞ்சளும், குலுங்கும் கனி வகையின் மாலைகளும் பழையாறை நகரை ஒரு பழச்சோலையாக்கிப் பார்த் தன. பழுத்த விளங்கனியைப்பையல்கள் பந்துருட்டி ஆட உடைத்தெழுத்த மனம் ஊரே கமகமத்தது. செடியிலும் கொடியிலும் சிரித்தது போது மென்று மங்கையர் சடையிலும், மழலை முடியிலும் பூத்துக் குலுங்கின. மலர்க்குலம். ஒரு புது மனப்பெண்னைப் போல் பழையாறை விழாக்கோலம் கொண்டது. தென் பொதிகைத் தேனில் குளித்து, தென்ன வன் வைகைத் தமிழில் திளைத்து, செந்தாழை மட லில் சிலிர்த்து, செங்கரும்பின் சோலையிலே திரிந்து சேயிழையார் நடையிலே பொலிந்து, யாழிலே குழைந்து குழலிலே இழைந்து-கல்லா மழலையிலே கனிந்து எழுந்த தென்றல் இசை அலைகளாய் ஆறை நகரை வலம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/65&oldid=781705" இலிருந்து மீள்விக்கப்பட்டது