பக்கம்:நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மழ, அதிலும்-ஒரு (அப்பரின் தொண்டராக இந்த அவைக்கே வந்திருக்கிரு.ர். அடிகளே வருக! அமராபரணத் தவச் சுடரே! வருக! என அஞ்சலித்து-அவை நடுவே அவரை இழுத்து நிறுத்தினன். காவலர் வளைத்து நின்றனர். கத்: சித்தாந்த போதகரே! நீர் தந்த சிவஞானம் பழுத்து விட்டது பாரீர். என நகைந்தார். அப்போது குமாரதேவன் வந் தான். குமா: கூத்தர் பெருமானுக்குக் கோடி வணக்கம்! கூத்: குமார தேவா!-நீ என்ன கொண்டு வந் தாய்? குமா: இது நேரம்: வாரங்கல் அரசன் ஊரில் இல்லை. அங்கே நுளம்பன் படையோடு நுழைந்து விட்டான்! கோட்டை சரிந்தது, கொடி மரம் பற்றி எரிந்தது. வார: ஆ! இது என்ன கதை. நடக்க முடியாத பேச்சு... மழ: போடக் கூடாத வேஷத்தை நீர் போட்டு வந்திருக்கும் போது இது ஏன் நடக்க முடி யாது...வேந்தர் பெருந்தகையே...உங் க ள் வேஷம் கலந்து விட்டது. எங்கள் கம்பருக்கு நீர் நண்பர் என்பதால் தமிழுக்கு நல்ல அன் பர். வருக! வருக!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/69&oldid=781713" இலிருந்து மீள்விக்கப்பட்டது