பக்கம்:நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் இjரை சரித்திரங்களெல்லாம் இலக்கியம் ஆவ தில்லை. இலக்கியங்களை எல்லாம் சரித்திரம் என்று ஏற்பதற்கு இல்லை. ஒரு சில உருக்க மான நிகழ்ச்சிகளையும் சுவையான செய்தி களையும் வலுவான கருத்துக்களேரும் மைய மாக வைத்து இலக்கியம் பிறப்பதுண்டு. அப்படிப்பட்டதொரு வரலாற்றுச் சுவட்டில் ஊற்றெடுத்த இலக்கியப் பெ ரு க் கே கங்கைக்கு அப்பல். சங்காலத்துக்கு முன்னல் செங்கோன் என்ற ஒரு தென்புலத்து வேந்தன் வடபுலத் தின் மேல்படை நடத்திச் சென்ருன் என்பர். சங்ககாலத்தில், பட்டினப்பாலேயின் பாட் டுடைத் தலைவன் ஆன கரிகாற் பெருவள வன் இமயத்தின் முதுகு நெளிய படை நடத்தி புலி பொறித்து வந்தான் என்பர். பாண்டியரில் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் உண்டு. சேரத்து செங்குட்டுவன் கங்கைக் களத்தில் பதினெட்டு நாழிகை பில் பகை முடித்து கனக விஜயர் தலை நெறிய கண்ணகிக்கு கல்லெடுத்து வந் தான் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/76&oldid=781728" இலிருந்து மீள்விக்கப்பட்டது