பக்கம்:நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆழ்வார் அருளிய நாலாயிரங்களும் இசைத் தமிழ் என்பார் ஏற்கின்றேன். ஆயினும் பண்களே மறந்தார், தாளங்களைத் தேடுகின்ருர் தியாகராய, தீட்சத, சாத்திரிகள் தென்னவன் இசைக்கு தெலுங்கில் உயிர் கொடுத்தார் கர்நாடகமெனக் கன்னடத்தில் பெயர் கொண்டது நாடகத் தமிழைப் பற்றி நான் என்னென்பேன் சிலம்பு உண்டு என்று, சிலிர்த்து எழுவாருண்டு கம்பன் பாத்திரங்கள் பேசுவது நாடகமென்பார் சுந்தரம் பிள்ளையின் மனேன்மணியைச் சொல்வார் நாட்டிய மகளிர் ஆடலும் நாடகமென்பார் அரனும், அம்புலங்களில் ஆடினன் என்னே நாடகத் தந்தை சங்கரதாசர் இதிகாச புராணங்களிலிருந்து சில எழுதினர் பம்மல் சம்மந்தர் மேலே நாடகங்களை தமிழாக்கிப் பார்த்தார், 'துரக்குத்துாக்கி சதாரம், பகாவலி, அலிபாதுவு:ா’’ என்று சில பார்சி நாடகங்களும் மேடைக்கு வந்தன. அறிஞர் அண்ணுவும், தம்பிகளும் எழுதினர் அன்ருட நாளேடுகளாக அழிகின்ற நாடகங்களும் அரங்கேறிப் பார்க்கின்றன ஆயினும் விரல் விட்டு எண்ணுவதோ நாடகத்தை தில்லை அம்பலவன் திருக்கூத்தில் இருந்து தெருக்கூத்து வரை நாடகத் தமிழைத் தேடுகின்றேன் நாடகத் தமிழுக்கு என் எழுத்தின் முதற்படியாக தருகின்றேன் மீனாட்சி நாடகத் தமிழ். ஏகே வேலன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/79&oldid=781734" இலிருந்து மீள்விக்கப்பட்டது