பக்கம்:நாடகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காவேரிக்கரையினிலே குடகிலே பிறந்து, கொங்கிலே வளர்ந்து, மருதிலே நடந்துவந்தாள் ஒரு மங்கை. கல்லா மழலைக்குக் கனகச் சிலம் பொலித்தாள் கனி வாய்ச்சிரிப்புக்கு கமலம் விரித்தாள். சிந்தாத இளமைக்குச் செவ்வாழை மடல் தரித்தாள். அல்லியிடை துவள, குவளை விழி மலர, புன் னேயடி இட்டு,காந்தள் விழி காட்டும் அவள் ஒரு குறிஞ்சிப் பெண். தமிழ்க்குமரி பெயர் காவிரி! திருசிரபுரம் வரை அவள் வளர்ந்து வந்த பொலிவு, தஞ்சைப் பரப்பில் அவள் வளர்த்த தாய்மை அழகு! நஞ்சைப் பரப்பெல்லாம் அவள் நலம் செய்த பசுமைக்கோலம்! செந்நெல் கதிர்சாய, செவ்வாழைக் கனிசாய, தென்னை குலைசாய, செங்கரும்பு வேலிசாய, இருகரையும் அலைசாய அவள் அன்று தொடர்ந்தாள்: இன்றும் நடிக்கின்ருள். புஞ்சை வெளி அவள் பூத்துச் சிரித்த மலர்க் காடு! செல்லக் குழந்தையை அள்ளித் தழுவும் அன்னை போல, தஞ்சை மண்ணைத் தழுவும் கிளை நதிகள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/8&oldid=781736" இலிருந்து மீள்விக்கப்பட்டது