பக்கம்:நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கீர்த்திகட்கெல்லாம் மெய்க்கீர்த்தி."எழுது காரி,சி. யின்காவலன் கங்கை மேல் காதல் கொண் டான். நிலப்படை வடபுலம் நோக்கி நடந்தது. தமிழ்ச் சிங்கங்கள் வங்கம் சேர்ந்தன. ஆங்கே இமயம் சரிந்து ஒரு நதியாக நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பேர் கங்கை! சங்கரன் முடிப்பிறந்த கங்கைப் பெண்ணே ! எங்கள் சங்கத்தமிழ் நாட்டுக்கு உன்னைக் கொண்டுபோக வந்தோம். என அள்ளி எடுப்பது போல் கங்கையின் வென் ளத்தில் காவிரியின் வீரர்கள் துள்ளி ஆடினர். இன்று வங்கமென வழங்குவது அன்று லாடம். அதற்கு முன்னேப் பழம் பெயர் விராடம்! அதற்குத் தலைவன் தருமசேனன் அவன் போதி மரத்துப் புத்தன் வழி நின்ற பெருமகன். அவனரச மாளிகை ஒரு புத்தர் கோயிலெனப் பொலிந்தது. ஆங்கு போர் வந்த சேதி கேட்டு பொங்கினர். நாகநந்தி: இங்கே அரசில்லே இருப்பதெல்லாம் புத்த மடங்கள். விரர்கள் பிட்சுகளாக்கி விட்டனர். என்ற எண்ணத்தில் படைகொண்டு வந்தார்கள். அவர்கள் கொடியிலே புலி கொண்டிருந்தால் நாம் போரிலே புலிகள். அர: நாகநந்தி! உன் வீரத்தை வரவேற்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/80&oldid=781738" இலிருந்து மீள்விக்கப்பட்டது