பக்கம்:நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காவலனும் நம் ஏவலுக்கு காத்திருப்பார்கள். தேவகுரு. நமக்கு பஞ்சாங்கம் படிப்பார், கற்பகத்தரு நீ கேட்ட தெல்லாம் கொடுத்திருக்கும். அரசி : எத்தனை பெரிய செல்வாக்கு பெற்ருலும், அவை: யெல்லாம் தாய் என்ற பெருமையை தருவதில்லை. அரசன் : நாட்டு மக்களெல்லாம் நம் மக்கள் என்று இருப்போம். அரசி : ராஜ நீதிக்கு அது நல்ல தத்துவம். வாழ்க்கை விளக்கத்திற்கு தாலாட்டுப் பாடித்தான் ஆகவேண்டும். (என்று உருக்கமாகச் சொல்லுகிருள்.) அரசன் : இறைவன் நமக்கு எத்தனை பெரிய குறை வைத்து விட்டான் தேவி! அரசி : குறத்தியின் வார்த்தைகளால் அந்தக் குறைதிர வழியும் சொல்லிவிட்டாள். நாம் தீர்த்தயாத்திரை புறப்பட வேண்டும், அரசன்: வேள்விக்கு நாள் வைத்து விட்டோமே. அரசி : குறத்தியின் கேள்விக்குப் பதில் சொல்லித்தானே ஆகவேண்டும்! மனக்குறையுள்ள நான் யாகப்பத்தினி ஆகமுடியுமா? அரசன் : இறைவா... நினைப்புக்கும் நடப்புக்கும் இடையே எத்தனை பெரிய அகழியை வெட்டுகிரு ப்? (அரசன் நகர்ந்து அப்பால் சென்று அழைப்பு மணியை அடிக்கிருன். அரண்மனைத் தலைவன் வந்து 'பணிகிருன்..!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/87&oldid=781752" இலிருந்து மீள்விக்கப்பட்டது