பக்கம்:நாடகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I3 காவலன் : தென்பாண்டி கொற்றம் சீரோங்கி வாழ்க, எங்கள் வேந்தன் பிரான், பொன்னர் திருவடிகட்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள். அரசன் : இதுசமயம் அஸ்வமேத யாகம் நிறுத்தப்படுகிறது. உங்கள் அரசனும் அரசியும் தீர்த்த யாத்திரை புறப்படுகின்றனர். எங்கள் முதல் முழுக்கு சேதுக்கரை. ஆவன செய்க. (காவல் தலைவன் ஆணையை ஏற்றுச் செல்கிருன்) காட்சி எண். 6 இடம்: சேதுக்கரை - சேதுக்கரை மணல் பரப்பில் பவளத்தால் படகு போல் மேடைகட்டி, முத்தால் குடை நிறுத்தி இருக்கின்றனர். அரசனும் அரசியும் யாத்திரையாக வந்து சேருகின்ருர்கள். சேதுகாவலனும், படை பாளர்களும் மீனவர்களும், தாரை தப்பட்டை முழக்கத்தோடு அரசனையும் அரசியையும் வரவேற்கிரு.ர்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு மீனவ மங்கை ஒரு இளமீனவனே முத்தெறிந்து வம்புக்கு இழுக்கிருள். மங்கை : மீனவனே, மீனவனே, எனக்கென்று ஆனவனே நெடுங்கடலில் நீ பிடிக்கும் மீனெல்லாம் கரையேறி நீந்துமோ? பாண்டியத்து மீனைப்பார். பறக்குது பறக்குது வானத்திலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/88&oldid=781754" இலிருந்து மீள்விக்கப்பட்டது