பக்கம்:நாடகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 (மீனவனும் அவளைப்பற்றி இழுத்து அவை முன்னுல் நிறுத்துகிருன்) அவன் : கல்லி படிக்கின்றவளே கள்ளி! உன் வல்லடியும் சொல்லடியும் இனியும் செல்லாதடி, இந்த மண்ணில். வழக்குரைப்பேன். பதில் சொல்லடி. சொல்லடியோ. அவள் : அது தீராத வழக்கு இந்த ஜகத்துக்கு மாருத பிணக்கு. அவன் : கண்டசரம் ஒன்று, நான் காணுவதும் உண்டு. உந்தன் கழுத்துக்கு அது வந்த விதம் என்ன? கொண்டவன் நானிருக்க தந்தவன் யாரடி பெண்னே? அவள் : முத்துச்சுமையெடுத்து முதுகுளத்துார் வழி நான் போகையிலே, கழுத்து வளையக்கண்டு நம் காவலனும் அங்கே கொடுத்த பரிசமடா... கொடுத்த பரிசமடா. அவன் : கொல்லும் விழியுனக்குக் கொடுத்தவன் யாரடி? அவனைக் கொல்லத் துடிக்கிறேன், பேரைச் சொல்லடி! கொஞ்சம் நெருங்கி நில்லடி. அவள் : வெல்ல நினைத்தாயோ மாறனே! அவனை வெல்லத் தகுமோ! சிவனை செந்தில் குமரனை பாரடா. அவன் கள்ளாலும் வாராத மயக்கம் உன்னேக் கண்டாலே வருவதென்ன கிறக்கம். அவள் : சொன்னலும்புரியாத சுவைதான். சுவைத்தாலும் தீராத சுவைதான். அவன் : முத்தெடுக்க நான் அழைத்தால், முறுக்குவதென்ன பெண்ணே, நீ முறுக்குவதென்ன பெண்ணே. அவள் : பெற்றெடுக்க ஆசை இன்னும் பிறக்கவில்லை. ஆதனுல், இது தீராத வழக்கு. இந்த ஜகத்துக்கு மாருத பிணக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/89&oldid=781756" இலிருந்து மீள்விக்கப்பட்டது