பக்கம்:நாடகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாலூட்டி வளர்க்கும் தாயினும் சாலப் பயிரூட்டி நிலம் வளர்க்கும் காவிரிக்கு வாழ்த் துரைக்க வார்த்தை எங்கே? வடக்கு வாயில் அரிசிலாறு; தெற்கு அலங்கம் குடமுருட்டி முற்றத்தில் முடிகொண்டான்: புழக்கடையில் திருமலைராஜன் எனப்பல ஆறு இடையிட்ட ஆறைநகர், படையூர், நுழையூர் சக்திமுற்றம், சோழ மாளிகை என இன்று பல சிற்றுாராய் இருக்கின்ற சரித்திரப்புகழ் பைந்தமிழ்ப் பெருமை நிமிர்ந் திருந்த பழையாறைத் திருப்பதி க வி ரி யின் மடியில் கொலுவிருந்தது. சோழன் மூன்ரும் குலோத்துங்கனுக்கு அது இரண்டாம் தலைநகர். வளம் செய்த காவிரிக்கு நிகராக தமிழ் நலம் செய் திருந்தது அங்கே. ஒட்டக் கூத்தர் சோழன் அவைக்குப் புலவர் அமைச்சுக்கு முதல்வர்! செம் பியன் மழவாரயன் படைக்குத்தலைவன்! சிற்றம் பலமுடைய வேதர். திருமந்திர ஒலைக்கு நாயகம். ஏரகப்பாடி குமாரதேவன் கோட்டைக்குக் காவல். ஆக தமிழும் அரசும் தழைத்திருந்த அந்த நாளில் தலைக்காட்டுத் துாது வந்தது. கூத்தர்: காவிரி போல் பெருகி, கன்னித் தமிழ் போல் நின் கொற்றம் தழைத்து வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/9&oldid=781758" இலிருந்து மீள்விக்கப்பட்டது