பக்கம்:நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 முனி: எழுத்துக்கும் சொல்லுக்கும்தான் இலக்கணம் பெற்றிருக்கின்றன. பிற மொழிகள். இங்கே அகத் துக்கும் புறத்துக்கும் பொருளிலக்கணம் பேசுகிறது தொல்காப்பியம். அரசன்: அவர் பெயர். முனி: அவன் அப்பனிட்ட இடுகுறி பெயர் நமக்கெதற்கு! அவன் ஆக்குகின்ற தொல்காப்பியமே அவனுக்கும் பெயராகும். அரசன்: இந்த அரியபெரிய முயற்சிக்கு நானும் நாடும் கடமைப் பட்டிருக்கிருேம் ஸ்வாமி. முனி: எமக்குத் தொழில் தமிழும், துறவும்தானே! அரசன்: வணக்கம். எங்களுக்கு ஆசிகூறுங்கள். நாங்கள் விடை பெறுகிருேம். முனி: எங்களைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்து விட்டேன். உங்களைப்பற்றி . . . அரசன்: பிள்ளையில்லை என்பது இவளுக்குப் பெரிய குறை. புனித யாத்திரையாகப் புறப்பட்டோம். முனி: கங்கையும். காவிரியும் கடலும் கடமை தவராத உங்களைத்தேடி வராதா! இங்குள்ள காடுமேடெல்லாம் சுற்றிப் போக வேண்டாம். கடமை உங்களுடையது. கருணை அவனுடையது, ஊருக்குப் போங்கள். (அரசி திடுக்கிட்டு) அரசி : ஸ்வாமி! பாத்திரையை இடை வெளியில் நிறுத்தலாமா? மீனுட்சி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/96&oldid=781774" இலிருந்து மீள்விக்கப்பட்டது