பக்கம்:நாடகத் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

நோக்கு :-இதைப்பற்றி பாரமும், நுண்மையும் மாயமு முதலாயினவற்றை உடையது;" என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது தவிர மற்ருென்றும் அறிகிலோம்.

தோற்பாவைக் கூத்து :- இது தோலாற் பாவைசெய்து ஆட்டுவிப்பதாம். இக்காலத்தும் சில கிராமாந்தரங்களில் இது நிகழ்வதைக் காணலாம். ஒரு வெள்ளைத்திரையை முன்னிட்டு, அதன்பின் ஒரு விளக்கினைவைத்து, இடையில் அவைகளின் நிழல் திரையிற் படும் படியாக, தோலினுற் சமைத்த பாவைகளைக் கயிறு கொண்டோ அல்லது கையினாற்பிடித்தோ, ஆட்டிக்காட்டும் வழக்கமுண்டு. மாணிக்கவாசக சுவாமிகள் உலகுய்யும்படி திருவாய் மலர்ந்தருளிய ஆநந்தமாலையில் சீலமின்றி, நோன்பின்றிச் செறிவேயின்றி யறிவின்றி, தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனே' என்று பாடியிருப்பது, இத்தோற்பாவைக் கூத்து அவர்காலத்தில் சாதாரணமாக நடைபெற்றது என்பதை அறிவிக்கின்றது. இதற்கு "நிழலாட்டம்' என்று மற்றொரு பெயர் உண்டு ; 'நிழலாட்டப்பாவை’ என்பதைக் காண்க. இதனின்றும் உற்பத்தியானது பொம்மைக்கூத்தென்று நாம் ஒருவாறு ஊகித்தறிவதற்கு இடங்கொடுக்கிறது. இது, எடுத்துக்கொண்ட நாடக பாத்திரங்களுக் கேற்றபடி, பொம்மைகளை மரத்தினாற்செய்து, ஆடையாபரணங்களே அணிவித்து, ஒரு சிறு அரங்கம் அமைத்து, அதற்குப்பின்னல் பொம்மைகளே ஆட்டுவிப்பவன் நின்று, கயிறுகளினால் இப்பொம்மைகளைப் பிடித்து, கதைக்குத் தகுந்தபடி அவைகளே ஆட்டுவிப்பதாம். அரங்கத்திற்குப் பின்புறம் கறுப்புத்திரை சாதாரணமாக இட்டுருப்பதால் பொம்மைகளை ஆட்டுவிக்கும் கறுப்புக்கயிறுகள் எதிரில் நின்று பார்ப்பவர்களுக்கு, சாதாரணமாகத் தெரியாது. இப்பொம்மைக் கூத்தானது நமது தேசத்தில் மிகவும் பழமையான காலமுதல் உண்டென்பதற்குப் போதுமான அத்தாட்சி தெய்வப் புலமை திருவள்ளுவநாயனர் தமிழ் உலகம் உய்தற்பொருட்டு இயற்றிய திருக்குறளில் இருக்கின்றது. அந்நூலில் 102 ஆவது அத்தியாயம் 10 வது குறள்

"நானகத்தில்லாரியக்க மரப்பாவை
நாணுலுயிர்மருட்டி யற்று' என்பதாம்.

இதனால் அவர் காலத்திலேயே மரத்தினாற் சமைத்த பாவைகளைக் கயிறுகொண்டு ஆட்டுவிக்கும் வழக்கம் உண்டென அறிகிறோம். இவர் காலம் இற்றைக்கு சற்றேறக்குறைய 1800 வருஷங்களுக்கு முன்பானதால், இப்பொம்மைக்கூத்து மிகவும் புராதனமானது என்பதற்குச் சந்தேகமில்லையென்று கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/11&oldid=1285060" இலிருந்து மீள்விக்கப்பட்டது