பக்கம்:நாடகத் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

ரியர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் இந்த எழு வகைப்பட்ட வினோதக் கூத்தானது, உயர்குலத்தோரின் வினோதத்திற்காக இழிகுலத்தோரால் சாதாரணமாக ஆடப்பட்டதென அறிகிறோம். இவைகள் இழிகுலத்தோராட வகுத்ததையுற்று நோக்குங்கால், உயர்குலத்தோர்க்கு இதர கூத்துகள் வகுக்கப்பட்டன என்பது தோற்றுகிறது. இச்சந்தர்ப்பத்தில் கலித்தொகையில் முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து" (கருங் கூத்து= இழிந்த நாடகம்) என்று கூறப்பட்டிருக்கிறது கவனிக்கத் தக்கது,

மேற்கூறிய பிரிவுகள் அன்றி, சிலப்பதிகாரத்துள் இளங்கோவடிகள் உபயோகித்திருக்கிற பல்வகைக்கூத்து’ என்னும் சொற்றொடருக்கு உரையெழுதுங்கால் அடியார்க்கு நல்லார்-பல்வகைக் கூத்தாவன-வென்றிக்கூத்து, வசைக் கூத்து, வினோதக்கூத்து முதலியன” என்று கூறியுள்ளார். இவற்றுள் வசைக்கூத்தைப் பற்றியும், வினோதக்கூத்தைப்பற்றியும் மேலே கருதினோம், எஞ்சி நின்றது வென்றிக் கூத்தாம்.

வென்றிக் கூத்து:-பகையரசரைத் தோற்கடித்து வெற்றி கொண்ட காலேயில், ஆடப்பட்ட கூத்தெனப் பொருள்படும். 'மாற்றான் ஒழுக்கமும், மன்னனுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக்கூத்தே' என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கூத்து வேற்றரசர்களே வென்ற வெற்றிக்களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று, போர்த் தலைவரோடு கைபிணைத்து ஆடப்பட்டதென்றும் அறிகிறோம். அடியார்க்கு நல்லார் இவ்வென்றிக்கூத்தைப் பற்றிக் கூறுங்காலை கொடித் தேர்வேந்தரும் குறுநிலமன்னரு முதலாக உடையோர், பகைவென்றிருந்தவிடத்து, வினோதம் கானும் கூத்தென்பதாம்' என்று உரைத்துள்ளார். அன்றியும் வென்றிக் கூத்தும் வசைக்கூத்தும் தாள இயல்புடையன என்றறிகிறோம்.

துணங்கைக்கூத்து :- என்றும் மற்றோர் வகைக்கூத்து கூறப்பட்டிருக்கிறது. முடக்கிய இருகை பழிப்புடையொற்றி துடக்கிய நடையது துணங்கையாகும்' என்று இதற்கு வியாக்கியானம் கூறப்பட்டிருக்கிறது ; இதற்கு சிங்கி யென்று வேறொரு பெயர் உண்டென அறிகிறோம். மேற்குறித்த வகைகள் அன்றி ஆரியக்கூத்து என்னும் ஓர் வகைக் கூத்தும் குறிக்கப்பட்டிருக்கிறது. இது கம்பங்களைக் கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகத்_தமிழ்.pdf/13&oldid=1285068" இலிருந்து மீள்விக்கப்பட்டது